தலைப்பு : செம்புலம்
ஆசிரியர் : இரா. முருகவேள்
பதிப்பகம் : பொன்னுலகம் பதிப்பகம்
விலை : 250/-

பதிவு செய்த நாள்

13 டிச 2017
10:37

   மூன்று மாதங்களுக்கு முன்பாக நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணலில் தான் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த எழுத்தாளர் இரா.முருகவேள் தற்போது அந்நாவலை எழுதி முடித்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறார். 
ஒரு குற்றத்தை  காவல்துறை, மனித உரிமை ஆணையங்கள், நீதிபரிபாலனம் பண்ணுகிறவர்கள் ஆகியவர்களின் கோணத்தோடும் அணுகும் கதையம்சத்துடன் துப்பறியும் நாவலாக வெளிவர இருக்கும் இந்நூலுக்கு ‘செம்புலம்’ எனப் பெயரிட்டிருக்கிறார். பொன்னுலகம் பதிப்பாளர் திருப்பூர் குணா இதுகுறித்த அறிவிப்பைத் தனது முகநுலில் தெரிவித்திருக்கிறார். வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சிக்குள் நாவல் வெளியாகுமெனத் தெரிகிறது. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)