பதிவு செய்த நாள்

13 டிச 2017
14:25
கடிமை அருள்ராஜின் கடல்நீர் நடுவே - சூர்ய மூர்த்தி

  வாரம்தோறும் வாசகசாலை நடத்தும் புத்தக அறிமுகக் கூட்டம் நேற்று அசோக்நகர் வட்டார நூலகத்தில் நடைபெற்றது.
கடிகை அருள்ராஜ் எழுதிய குறுநாவலான ‘கடல்நீர் நடுவே’ குறித்து சூர்யமூர்த்தி பேசினார்.
அவர் பேசிய உரையில் இருந்து…
“இந்த நாவலில் மீனவ மக்களின் வாழ்க்கையோடு சேர்த்து நிறைய தகவல்களையும் பதிவு செய்துள்ளார் கடிகை அருள்ராஜ். இதுவரை கரையில் இருந்து மட்டுமே எழுதப்பட்ட மீனவர்களின் வாழ்க்கைப்பாடுகளை, கடலுக்கு நடுவே இருந்து எழுதியிருக்கிறார்.
2011ல் கடலுக்கு மீன் பிடிக்க படகில் நான்கு பேர் போகிறார்கள். அதில் 60 வயதுடைய முத்தவர் தாசன், 1985ல் நடந்த அவருடைய அனுபவக் கதையைச் சொல்கிறார். பிறகு அப்படியே தன் முன்னோர்கள் சொன்னதாக 1979ல் நடந்த கதையையும் பதிவு செய்கிறார். இந்த மூன்று கதைகளும் தான் நாவலின் மையம்.
ஆழ்கடல் மீன்பிடி முறையும், அதில் நடக்கும் சாதக பாதகங்களும், மீனவர்கள் பயன்படுத்திய வாக்கிடாக்கி தொழில்நுட்பம், காத்துக் கடலில் சுறா வேட்டை என்று நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் த்ரில் நிறைந்ததாக இருக்கிறது. படகில் ஆழ்கடலுக்குச் சென்றவர்களில் ஒருவர் கடலில் தவறி விழுந்துவிட, அவரைத் தேடும் பயனத்தில் மீனவ மக்களின் மனிதாபிமானம் நிறைந்த வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார் கடிகை அருள்ராஜ்.” எனப் பேசினார்.
- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)