பதிவு செய்த நாள்

24 பிப் 2017
17:44

 இயற்பெயர்: க.சுப்பிரமணியம். 

புனைப்பெயர்: நாஞ்சில்நாடன் 

பிறப்பு: டிசம்பர் 31, 1947

ஊர்: வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.
தமிழ் படைப்பிலக்கியத்தில் நாஞ்சில்நாடன் மிக முக்கியமான எழுத்தாளர். மரபிலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி எடுத்தார். 
தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில்காயும், மாமிசப்படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை, எட்டுத் திக்கும் மதயானை ஆகிய நாவல்கள்.

தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், வாக்குப்பொறுக்கிகள், உப்பு, பேய்க்கொட்டு,பிராந்து, நாஞ்சில் நாடன் கதைகள், சூடிய பூ சூடற்க, (சாகித்திய அகடாமி விருது பெற்றது) முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு) கான் சாகிப், கொங்குதேர் வாழ்க்கை ஆகிய சிறுகதை தொகுப்புகள்.
மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப்பாறை ஆகிய கவிதை தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை, தீதும் நன்றும், திகம்பரம். காவலன் காவான் எனின்,    அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி) அகம் சுருக்கேல் எப்படிப் பாடுவேனோ? கைம்மண் அளவு ஆகிய கட்டுரை தொகுப்புகலையும் எழுதியுள்ளார்.
2010-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது டொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)