பதிவு செய்த நாள்

17 டிச 2017
18:00

  கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே (Madras Electric Tramway Ltd) 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ட்ராம் ஓடுவதற்கான டிராம்வே (Tramway) போடும் பணிகள் April மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் முடிந்து சென்னையில் டிராம்கள் ஓட துவங்கிய தினம் மே 7, 1895. 1904 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட டிராம்கள் சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றியது.சில டிராம்கள் குறைந்த தூரம் பயணம் செய்பவையாகவும் சில டிராம்கள் நெடு தூரம் பயணம் செய்பவையாகவும் இருந்துள்ளன. நெடு தூரம் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளவை Washermanpet to Purasaiwakkam, Royapuram to Egmore, Mylapore to George Town ஆகியவை. இந்த தூரத்தை Google Maps இல் பார்த்தால் 7-8 KM வருகிறது. பிறகு எப்படி இது நெடுந்தூரம் ஆகும் என்ற கேள்வி எழுகிறதா!! டிராமில் பயணம் செய்தால் இது நெடுந்தூரம் போல் தோன்றும். ஏன் என்றால் டிராமின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்திற்கு 7 KM தான்.Mylapore முதல்  George Town வரை செல்ல கட்டணம் இரண்டு அணாக்கள் மட்டுமே. அதாவது ஒரு ரூபாயின் எட்டில் ஒரு பங்கு (One Eighth of a rupee).தோராயமாக ஒரு KMக்கு  0.25 அணா (1.56 பைசா). இன்று ஒரு KMக்கு நாம் செலவழிக்கும் தொகை தோராயமாக 1.25 ருபாய். 80 மடங்கு குறைவு. நமது பணத்தின் மதிப்பு எந்த அளவு சரிந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.அன்றே daily pass முறை இருந்துள்ளது. ஆனால் ஞாயிறு மட்டுமே. 6 அணா டிக்கெட் வாங்கினால் நாள் முழுதும் எங்கு வேண்டுமானாலும் டிராம்களில் சென்று வரலாம். மாத சீசன் டிக்கெட் ஒரு குறிப்பிட்ட தடத்திற்கு 6 ரூபாய். அனைத்து தடங்களுக்கும் என்றால் 10 ரூபாய். டிரைவர் மற்றும் கண்டக்டர் காக்கி உடுப்புகள் அணிந்திருப்பர். அனைத்து பெட்டிகளுக்கும் ஒரே கண்டக்டர் தான். மிக அரிதாக டிக்கெட் பரிசோதகர் டிராமில் ஏறி டிக்கெட்களை பரிசோதிப்பதுண்டு.சென்னையில் டிராம்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 700 மைல்கள் (~1120 KM) பயணித்துள்ளது மற்றும் சராசரியாக 1.25 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது.ஒவ்வொரு டிராமும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருந்தது. டிராமின் தலைக்கு மேல் உள்ள எலெக்ட்ரிக் கேபிள்கள் மூலம் மோட்டார்கள் உயிரூட்டப்பட்டன.1951-52 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு மாத மாதம் 40 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது. இதனால் அரசாங்கம் டிராம்களை நிறுத்த முடிவு செய்தது. 1953 ஆம் ஆண்டு சரியாக ஏப்ரல் 12 ஆம் தேதி நள்ளிரவு டிராம்கள் நிறுத்தப்பட்டன. 1650 பேருக்கு வேலை போனது. லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பிரயாணிகள் ஏப்ரல் 13 முதல் பேருந்துகளையும் குதிரை வண்டிகளையும் நாட வேண்டியதாகிற்று.
-நன்றி 
பாலாஜி ஸ்ரீனிவாசன் 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)