பதிவு செய்த நாள்

17 டிச 2017
18:23
தீராத்துயரத்தின் சிறுதுளி

 கார்த்திகைக் கண்மழையில்
நனையத் தொடங்குகின்றன
பிள்ளை விதைகள்.
காலம் மறக்கடிக்கப் பார்க்கும்
கண்ணீர் வலியின் வேர்கள்
வித்துக்களை சுமந்த வயிறுகளினடியில்
படர்ந்து கொண்டேயிருக்கின்றன.
எல்லோருக்கும் வரலாறாகி விட்ட வலியை
தம் காலங்கள் முழுவதும் அணையா நெருப்பாக
சுமந்து கொண்டு திரியும் தாய்மார்களின் மடிகளில் 
அவர்களின் பிள்ளைகள் 
முகம் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள்.
தம் பிள்ளைகள் ஆசைப்பட்ட
கனவுச் சூரியன் உதித்தாலாவது
வலி கொஞ்சமாறுமென்று சொல்லிக்கொண்டு 
வானம் பார்க்கும்  முதிய தாய் முகங்களின் கண்களில்  
பொசுக்கென்று பொங்கி வழிகிறது.
தீராத்துயரத்தின் சிறுதுளி. 
-தீபிகா 
வரைபடம் :  Peter de Francia, c.1953



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)