பதிவு செய்த நாள்

22 டிச 2017
13:18

 எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்மகன்
எழுத்தாளர் தமிழ்மகன்

டிசம்பர் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கும் இவ்விழாவில் தமிழ்மகன் எழுதிய, உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளான :
1. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (நாவல்)
2. தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்)
3. சங்கர் முதல் ஷங்கர் வரை
4. காதல் தேனீ (குறுநாவல்)
5. தமிழ்மகன் சிறுகதைகள் தொகுப்பு
ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் சு.வெங்கடேசன், நீயா நானா இயக்குநர் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)