பதிவு செய்த நாள்

25 டிச 2017
13:45
எழுத்தாளர் சரவணன் சந்திரனின் நூல்கள் வெளியீட்டு விழா!

 ழுத்தாளர் சரவணன் சந்திரன் ஏற்கனவே எழுதிய ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், வெண்ணிற ஆடை, அஜ்வா ஆகிய நூல்களும், தற்போது எழுதியிருக்கும் பார்பி, பாவத்தின் சம்பளம், மதிகெட்டான் சோலை, எக்ஸ்டஸி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இந்நூல்களை கிழக்குப் பதிப்பகம்  வெளியிட்டிருக்கிறது.

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

மதுரை பாண்டிமுனி கோவில் அருகே உள்ள ஆர்.ஆர்.மகாலில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இவ்விழாவில் பல்வேறு படைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எழுத்தாளர் முருகேச பாண்டியன் தலைமை உரையாற்றி முடிக்க, புத்தகங்கள் வெளியிடப்பட்டன. முதலாவதாக, ஐந்து முதலைகளின் கதை நாவலை மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி வெளியிட, வழக்கறிஞர் சரவணன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்புரையாற்ற, அடுத்தடுத்து… கவிஞர் சல்மா, எழுத்தாளர்கள் அர்ஷியா, சமயவேல், லக்ஷ்மி சரவணக்குமார், கடங்கநேரியன், ஆத்மார்த்தி, அருணாசலம், கார்த்திக் புகழேந்தி, அகரமுதல்வன் மற்றும் இளங்கோ கல்லாணை, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் விழாவில் பேசினர். நிகழ்ச்சியை கவிஞர் ஆன்மன் தொகுத்து வழங்க, இளங்கோவன் முத்தையா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
விழா முடிந்தவுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் கிடா விருந்து வைக்கப்பட்டது. மேலும், “விழாவில் கலந்துகொள்ளும் சிறப்புரையாளர்கள் யாரும், என்னைப் பற்றியோ என்னுடைய புத்தகங்களைப் பற்றியோ பேசக்கூடாது. தங்களது விருப்பத்திற்கேற்ப என்ன தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம்” என்று அன்புக் கட்டைளையிட்டிருக்கிறார் சரவணன் சந்திரன். ஆனாலும் சிலரைத் தவிர மற்ற அனைவருமே, சரவணன் சந்திரனுடனான நட்பு, அவருடைய எழுத்துகள் மற்றும் எழுத்துகளைக் கடந்து அவருடைய செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)