பதிவு செய்த நாள்

25 டிச 2017
17:06
எழுத்தாளர் தமிழ் மகன் நூல்கள் வெளியீடு

கடந்த சனிக்கிழமை 23 டிசம்பர்’17 அன்று காலை 9.30க்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் உயிர்மை பதிப்பகம் நடத்திய, எழுத்தாளர் தமிழ் மகனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  இவ்விழாவில் எழுத்தாளர் தமிழ்மகனின், வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல், தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், சங்கர் முதல் ஷங்கர் வரை, காதல் தேனீ குறுநாவல்கள் மற்றும் தமிழ்மகன் சிறுகதைகள் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ், பேராசிரியர். சுப.வீரபாண்டியன், சு.வெங்கடேசன், ஆண்டனி திருநெல்வேலி, ஜா. தீபா. எஸ்.பி.ஜனநாதன், சந்தோஷ் நாராயணன், கிராபியென் ப்ளாக், கடற்கரய், அதிஷா, வெய்யில், மதுமிதா, ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் தமிழ்மகன் இறுதியாக ஏற்புரை வழங்கினார். மதிய உணவுக்குப் பின் நிகழ்ச்சி முடிவுபெற்றது.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)