பதிவு செய்த நாள்

26 டிச 2017
17:36

  தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரம் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தொல்லியல் நுண்கலை மன்றம், சித்திர சபா அறக்கட்டளை சார்பில் ‘எளிமையின் சின்னம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு நல்லாசிரியர் செல்லப்பா தலைமை வகித்து, கக்கனின் எளிமையான வாழ்க்கை, வாரது நேர்மை குறித்துப் பேசினார்.

பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) மு.சுப்பிரமணியன், முதுகலை ஆசிரியர்கள் க.ப.கிருஷ்ணன், சு.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாரண இயக்கத்தின் முன்னாள்  மாவட்ட துணைத் தலைவர் சிவகிரி செண்பகம், சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கண்காட்சியில், கக்கன் வாழ்வின் பல நிகழ்வுகள் வரைந்து காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் வரைந்த காமராஜருடன் கக்கன், மருத்துவமனையில் கக்கனைச் சந்தித்த எம்.ஜி.ஆர்., போன்ற ஓவியங்கள் காண்போரைப் பெரிதும் கவந்தன. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பொ.வள்ளிநாகயகம், சித்திரசபா அறக்கட்டளை ஓவியர் வரகுணன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர் கோ.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)