பதிவு செய்த நாள்

25 மார் 2017
13:13

 ஒரு அதிகாலைக்கு

வாசனை உண்டா என்றால்

மறுக்காது ஆம் என்பேன்...

கண்ணே என்றெழுப்ப 

ஆரம்பித்து கடங்காரி

வரை துரத்தும் அம்மாவின்

வைகறை பூபாளம் மட்டும்

எப்போதும் தாலாட்டே...

எவ்வளவு தூரம்

என்பக்கம் இழுக்கிறேனோ

அவ்வளவு தூரம் போர்வையை

அவள் பக்கம் இழுத்துச்சுருட்டி

என் இடை அழுந்தக் கட்டிக் கொண்டு

சுருண்டு உறங்கும் மாயாவை பார்த்தால்

மறுபடியும் கண்சொருக 

உறங்கித் தான் ஆகவேண்டும்...
போற இடத்தில் என்ன பண்ண போறதுகளோ

என்ற பாட்டியின் ஆலாபனையில்

காதிரண்டும் அடைத்துக் கொள்ளும்

தலயணைக்கு கீழே...

சட்டென்று உள்ளுணர்த்தும்

தலைதடவலில் தெரிந்து போகும்

தைலைத்தின் வாசனை 

காற்றில் கலந்து வரும்....
தலை தூக்கி மடி இருத்தும்

நெற்றிவழித்து இமை தடவும்

அவர் போர்வை எனக்கு வரும்

அடர் மணமாய் நாசி நுழையும்....

வெள்ளை வேட்டியின்மென்மை

கன்னம் நெருடி குறுகுறுக்கும்

காதுமடல் தீண்டி

காபி ஆறிடும் கண்ணா என்ற

அப்பாவின் குரலுக்கா

அந்த குரலின் மென்மைக்கா

அழுந்தா ஓசையில் வருடும்

வார்த்தைகளுக்கா - ஏதொன்றோ

சொல்லில்லாமல் உணரவைக்கும்....

என் அப்பாவின் வாசனையுடன்

ஒரு அதிகாலைக்கான

சுகந்தத்துடன்.
- சாயா சுந்தரம் வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)