பதிவு செய்த நாள்

01 ஜன 2018
18:28

 நாற்பத்தி இரண்டு வருட எழுத்துப் பயணத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களை சம்பாதித்து, சீரியல் மோகத்தையும் மீறி, அவர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ரமணிசந்திரன். ‘இந்தப் பேர்ல எழுதறது பெண் இல்லே... ஒரு ஆண்!’ என்று அடித்துச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தன் முகம் தெரியாமல் திரைக்குப் பின்னே மறைந்து கொண்டிருப்பவர் ரமணிசந்திரன். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய எழுத்தாளர்களில் குறிப்பிடதக்கவர்.
ஆரம்பகாலத்தில் தேவி, ராணி போன்ற வார இதழ்களில் தொடங்கினார். ராணியிலும், தினத்தந்தியிலும் சூடுபிடித்த ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் குமுதம், கல்கி, கலைமகள் என்று எல்லா பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளிவந்தன. முழுப்பெயர் ரமணி. பாதிப் பெயரை மனைவிக்குத் தந்தவர் கணவர் பாலச்சந்திரன்! ‘அஸ்ஸாம் டிரிப்யூன்’, ‘மிட் டே’ உட்பட வட இந்திய பத்திரிகை பலவற்றுக்கு பிஸினஸ் ரெப்ரசென்டேட்டிவாக இருக்கிறார் பாலச்சந்திரன்!.  ஒரே மகனுக்கும் ஒரே மகளுக்கும் திருமணம் முடித்துவிட்டு பேரன், பேத்திகளோடு வாழ்ந்து வருகிறார் ரமணி.

ரமணிச்சந்திரன்
ரமணிச்சந்திரன்

பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் ஹீரோவை மனதில் வைத்துக்கொண்டு மகனுக்கு அரவிந்த் என்று பெயர் வைத்திருக்கிறார். அரவிந்துக்கு ‘பின்னி’ நிறுவனத்தில் தற்போது டெபுடி மானேஜராக உத்தியோகம்! ரமணி சந்திரனின் ஒரே மகள் அகிலா கிரிராஜும்கூட அம்மா போலவே எழுத்தாளர்தான். குழந்தைகளுக்காக இவர் எழுதிய இரண்டு கதைகளுக்கு சில்ரன்ஸ் புக் டிரஸ்ட்டின் பரிசுகள் கிடைத்திருக்கின்றன.
ரமணிச்சந்திரனின் நாவல்களை வெளியிடுபவர்களில் குறிப்பிடதக்கவர்கள் ‘அருளோதய’ பதிப்பக வெளியீட்டார்கள்.  இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள். கதை சொல்லும் உத்தியில் புதுமையை புகுத்தியதால் சமையலறை, தெருக்கோடி, பஸ் ஸ்டாண்ட், பால் கார்டு மாற்றுமிடம், சூப்பர் மார்க்கெட்... இப்படி எங்கே போனாலும் சரி, அங்கே எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் ரசிகைகளைப் பார்க்க முடியும். நாவல் உலகில் ஒரு பெரிய ஏரியாவையே தனக்கென்று பிடித்து வைத்திருக்கும் இவர், இதுவரைக்கும் எழுதிய மொத்த நாவல்கள் தொண்ணூறை தாண்டியவை.
இவரது வைரமலர் நாவலுக்கு தமிழக அரசு அளித்த  அனந்தாச்சாரி விருது, அதிகபட்சமாக விற்பனையான நாவல்களுக்காக ராணிமுத்து தந்த விருது என்று பல விருதுகள் பெற்றவர். எளிமையை விரும்பும் இவர் பத்திரிக்கை, மீடியா இவற்றிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். சுபமாக முடிக்கும் அவரது கிளைமாக்ஸ்காகவே அவரது நாவல்களை  படிப்பவர்கள் ஏராளம். அனுராதா ரமணன், ஆங்கிலத்தில் ‘ஜெஃப்ரி ஆர்ச்சருடைய’ எழுத்துகளுக்கு அடிமையானவர் ரமணிசந்திரன்.

படைப்புகள் :
வாழ்வு என் பக்கம்
ஆசை ஆசை ஆசை
அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
அடிவாழை
அமுதம் விளையும்
அன்பின் தன்மையை அறிந்த பின்னே
அதற்கொரு நேரமுண்டு
அவனும் அவளும்
அழகு மயில் ஆடும்
சந்தினி
எல்லாம் உனக்காக
என் உயிர் நீதானே
எனது சிந்தனை மயங்குதடி
என்னை யாரென்று எண்ணி எண்ணி
என்னுளே நிறைந்தவளே
கான மழை நீ எனக்கு
இடைவெளி அதிகமில்லை
இனி எல்லாம் நீ அல்லவா
இறைவன் கொடுத்த வரம்
இருளுக்கு பின்வரும் ஜோதி
இது ஒரு உதயம்
காதல் கொண்ட மனது
காதல் என்னும் சோலையிலே
காக்கும் இமை நான் உனக்கு
கல்யாணத்தின் கதை
கண்ணிலே இருப்பதென்ன
கண்ணால் பார்த்த வேளை
கண்ணன் மனம் என்னவோ
கண்ணே கண்மனியே
கண்ணின் மணி போன்றவளே
கண்ணும் கண்ணும் கலந்து
காத்திருக்கிறேன் ராஜகுமாரா
காற்று வெளியிடை கண்ணம்மா
காவியமோ ஓவியமோ
கிழக்கு வெளுத்ததம்மா
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
லாவண்யா
மானே மானே மானே
மதுமதி
மைவிழி மயக்கம்
மாலை மயங்குகின்ற நேரம்
மயங்குகிறாள் ஒரு மாது
மெல்ல திறந்தது கதவு
நாள் நல்ல நாள்
நான் உன்னை நீங்க மாட்டேன்
நான் என்பதும் நீ என்பதும்
நந்தினி
நாத சுர ஓசையிலே
நெஞ்சே நீ வாழ்க
நெஞ்சோடு நெஞ்சம்
நேச நதி கரையில்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நிலா காயும் நேரம்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நின்னையே ரதி என்று
ஒன்று பட்ட உள்ளங்கள்
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ
ஒரு சின்ன ரகசியம்
பால் நிலா
பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
பாலை பசுங்கிளியே
பார்க்கும் விழி நான் உனக்கு
பார்த்த இடத்தில் எல்லாம்
பொன் மானை தேடி
பொங்கட்டும் இன்ப இரவு
பூங்காற்று
பிரிய மனம் கூடுதில்லையே
புன்னகையில் புது உலகம்
சிவப்பு ரோஜா
சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்
சுகம் தரும் சொந்தங்களே
தண்ணீர் தணல் போல் தெரியும்
தந்துவிட்டேன் என்னை
தவம் பண்ணிடவில்லையடி
தென்றல்வீசி வர வேண்டும்
உன் முகம் கண்டேனடி
உறங்காத கண்கள்
வாணியை சரண் அடைந்தேன்
வாழும் முறைமையடி
வாரிசு
வைர மலர்
வலை ஓசை
வல்லமை தந்துவிடு
வந்து போகும் மேகம்
வீடு வந்த வெண்ணிலவு
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்ணிலவு சுடுவதென்ன
விடியலை தேடும் பூபாளம்
யாருக்கு மாலை
ஏற்றம் புரிய வந்தாய்
பொன் மகள் வந்தாள்

தொகுப்பு : வேணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)