பதிவு செய்த நாள்

10 ஏப் 2017
13:56
எழுத்துலகில் பிரபஞ்சன் - 55

   எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வரம்பில் எழுதத் தொடங்கி 55-ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அவரது பிறந்தநாளான வரும் ஏப்ரல்-29ம் நாளன்றுதமிழ் படைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பிரபஞ்சனுக்கு விழா எடுக்கவிருக்கிறார்கள்.  சென்னையிலுள்ள  ரஷ்ய கலாச்சார மையத்தில் முழுநாள் விழாவாக காலை 10.மணியிலிருந்து, மாலை 9-மணிவரை இந்நிகழ்வு  நடைபெற இருக்கிறது.

நிகழ்வில் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய புத்தகங்களின் வெளியீடு, படைப்புகள் குறித்தகருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. முக்கிய நிகழ்வாக எழுத்தாளர் பிரபஜ்ன்சனுக்கு  10 லட்சம் ரூபாய் பணமுடிப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான டிஸ்கவரி புத்தக நிலையத்தின் உரிமையாளர் வேடியப்பன் முனுசாமி தெரிவித்திருக்கிறார்.  இந்நிகழ்வில் தமி இலக்கிய ஆளுமைகள், படைப்பாளர்கள் வாசகர்கள் உட்பட பலரும் கலந்துக்கொள்ளவிருக்கிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)