பதிவு செய்த நாள்

12 ஏப் 2017
10:51

  இயற்பெயர்: ரங்கராஜன்

பிறப்பு: மே 3, 1935

சொந்த ஊர்: திருவல்லிக்கேணி

குறிப்பு:

தனது மனைவியின் பெயரான சுஜாதாவை தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் எழுத்து நடையால் தமிழகத்தின் பல வாசகர்களை கவர்ந்தவர். கவிதைகள், கதைகள், அறிவியல் நூல்கள் எழுதியுள்ளார். குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். பொறியியல் படித்ததால் தனது எழுத்துக்களில் தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் கதைகளில் கலந்து வாசகர்களுக்கு கொடுத்தார். அதற்காக, அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்ற இவர், 2008ம் ஆண்டு மறைந்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)