பதிவு செய்த நாள்

10 ஜன 2018
11:39

   சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறும் 41வது புத்தகக் கண்காட்சி 2018 ஜனவரி 10ம் நாள் துவங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 10000 தலைப்புகளில் 10லட்சம் புதிய நூல்களும், மொத்தம் அமைந்துள்ள 700க்கும் அதிகமான அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் எந்தெந்த அரங்குகள் எங்கெங்கு அமைந்துள்ளன என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக ரோபார்ட் இயந்திரம் ஒன்றும், எட்டு அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களை புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலை பிற்பகலிலும், மாலையும் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)