பதிவு செய்த நாள்

11 ஜன 2018
17:35

 இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் 'பாரதிய பாஷா விருது' இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில்,  ஜெய்காந்தன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி,  அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரதிய பாஷா பரிஷத் (இந்திய மொழிகள் கழகம்)  ஓர் அரசு சாராத் தன்னார்வ இலக்கிய அமைப்பாகும். இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பது அதன் முக்கிய நோக்கம். ஆண்டு தோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி வருகிறது.

மாலன் நாராயணன்
மாலன் நாராயணன்

40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் இருபதற்கும் மேற்பட்டு நூல்கள் எழுதியுள்ளார். புனைவுகளில் சமூக விமர்சனம், தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்ட இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞசு் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த மாலன், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட்களில் உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். சரஸ்வதி சன்மான் விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனின் தமிழ் மொழிக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த ஆ,ண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் லீ காங் சியான் ஆய்வுக் கொடை வழங்கப்பட்டு, சிங்கப்பூரில் ஆறுமாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும் தமிழரும் இவரே ஆவார்.

 மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுடன் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடை பெற இருக்கிறது.

-ஆர்.வெங்கடேஷ் 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)