தலைப்பு : என்னை நான் சந்தித்தேன்
ஆசிரியர் : ராஜேஷ்குமார்
பதிப்பகம் : அமராவதி பதிப்பகம்
விலை : 390/-

பதிவு செய்த நாள்

13 ஜன 2018
15:34

  ழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ‘என்னை நான் சந்தித்தேன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று அமராவதி பதிப்பக அரங்கு எண் 492ல் வெளியிடப்பட்டது. பபாசி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருக்க வி.கே.டி பாலன் நூலினை வெளியிட்டார்.

முன்னதாக வாசகர்களைச் சந்தித்து உரையாடிய ராஜேஷ்குமார்... “நீங்க எல்லோரும் என்ன சந்திக்க வந்ததுல மகிழ்ச்சி. நீங்க இல்லைன்னா என்னோட பேனா எழுதாது. எனக்கு ஊக்கம் கொடுக்குறது நீங்கதான்” என தன்னைச் சந்திக்க வந்த ஒவ்வொரு வாசகருடனும் உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நூல் வெளியீட்டு நிகழ்வில்
நூல் வெளியீட்டு நிகழ்வில்

“சார் எங்க மாமா உங்களோட தீவிர வாசகர். சாப்பிடம்போது கூட உங்களோட நாவலைப் படிச்சுகிட்டே இருப்பாரு. அந்தளவுக்கு உங்க மேல ஓர் ஈர்ப்பு. நீங்க இங்க இருக்கிறதா சொன்னதும் சந்திக்க முடியலையேன்னு வருத்தப்பட்டார்.” என்று ஒரு இளைஞர் ராஜேஷ்குமாரிடம் சொன்னதும், “அதனால என்ன...போன் போட்டுக் கொடுங்க நானே பேசுறேன்.” என்று அந்த வாசகருடன் போனிலேயே பேசி அவரை மகிழ்வித்தார்.

“கல்யாணம் முடிஞ்ச கையோட எங்க வீட்டுக்காரர் கோயமுத்தூருக்கு கிளம்பி போகணும்னு சொன்னாரு. என்னானு கேட்டதுக்கு, ‘ராஜேஷ்குமார் சார் கிட்ட நாம ஆசீர்வாதம் வாங்கணும். நான் அவரோட தீவிர வாசகன். அவரைச் சந்திக்கிறது தான் என்னோட வாழ்நாள் ஆசைன்’னு சொன்னார். பொங்கல் முடிஞ்சதும் அடுத்த வாரம் எப்படியாவது உங்களை கோயமுத்தூர் வந்து சந்திக்கணும்னு நினைச்சோம். ஆனால் உங்களை இங்கே பார்த்ததும் பெரும் பாக்கியம். எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று ஆசீர்வாதம் பெற்றனர் ஓர் இளம் தம்பதிகள்.

ஆசீர்வாதம் செய்த அவர் “நீங்க எப்போ கோயமுத்தூர் வந்தாலும், வீட்டுக்கு வாங்க. நான் அட்ரஸ் தரேன்.” என்று மேலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சந்திக்கும் ஒவ்வொரு வாசகரையும் நலம் விசாரித்து, மறக்காமல் ‘கோயமுத்தூர் வந்திங்கனா. நிச்சயம் வீட்டுக்கு வாங்க’ என்று அழைப்பு விடுத்தார். இரவு ஒன்பது மணி வரைக்கும் வந்திருந்த அனைத்து வாசகர்களையும் சந்தித்தார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)