பதிவு செய்த நாள்

17 ஜன 2018
16:22
 அப்பாதுரையம் நூல் தொகுப்பு வெளியீடு

   கா.அப்பாதுரையார் எழுதிய 97 நூல்களின் தொகுப்புகளை 47 தொகுதிகளாக பதிப்பித்திருக்கிறது தமிழ் மண் பதிப்பகம். ‘அப்பாதுரையம்’ என்கிற அந்நூல் வெளியீட்டு விழா நேற்று புத்தக கண்காட்சி ‘திருவள்ளுவர் அரங்கத்தில்’ நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் நூலினை வெளியிட செந்தலை கெளதமன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் பேசிய நாஞ்சில் சம்பத் “என்னுடைய இளமைக்காலத்தில் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அப்போதெல்லாம் காசு கொடுத்து புத்தகங்களை வாங்க வசதி இல்லை. கிடைத்த புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் திருநெல்வேலி தானாமூனா பஜாரில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் தேவநேயப் பாவாணர் எழுதிய ‘வடமொழி வரலாறு’ நூல் காணக் கிடைத்தது. அதனை குறைந்த விலை கொடுத்து வாங்கிப்போய் படித்தேன். அதன்பிறகுதான் என் வாழ்க்கையின் வாசல் திறந்தது அந்தப் புத்தகம்தான். அப்படி நான் பெரிது மதிக்கக் கூடிய தேவநேயப் பாவாணர் கா.அப்பாதுரையாரைப் புழந்து எழுதியிருக்கிறார். அப்படியான ஒரு பன்மொழிப் புலவரின் புத்தகத்தை வெளியிடுவது என்னுடைய பெரும் பாக்கியம்” என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் புலமை பெற்றவர் பன்மொழிப் புலவர் அப்பாதுரையார். மத்திய அரசின் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர் எழுதிய ஓர் ஆங்கில நூலுக்காக அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதன்பிறகு வருமானத்திற்கு வழியில்லாமல் துன்பப்பட்டிருக்கிறார். அந்தக் காலகட்டதில் பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருந்தாலும் தற்போது அவருடைய 97 நூல்கள் மட்டும் பதிப்பில் இருக்கின்றன. அந்த 97 நூல்களையும் 47 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)