பதிவு செய்த நாள்

19 ஜன 2018
15:07

       சென்னை புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு உரிய இடம் இல்லை என்று எத்தனை பேர் கவலையோ கவலைப்பட்டீர்கள்! ஆனால் கவலைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (ஜனவரி 20,21,22) குழந்தைகளுக்காக கதைப்பெட்டி ஒன்று காத்திருக்கும். குழந்தைகள் தங்கள் விருப்பம்போல் கதை எழுதி அந்தப் பெட்டியில் போட்டுவிடலாம். குட்டிக் கதையோ நீண்ட கதையோ குருவி கதையோ பஸ்ஸூ கதையோ எந்த விதிமுறையும் இல்லாமல் தங்கள் மனம்போன திசையில் எழுதி குழந்தைகள் கதைப்பெட்டியில் போடலாம்.

கதைப்பெட்டி
கதைப்பெட்டி

கதைப்பெட்டி இயல்வாகை (585) அரங்கில் கண்ணத்தில் கை வைத்து குட்டிகளுக்காகக் காத்திருக்கும். அரங்கிலேயே காகிதங்களும் இருக்கும். நீங்கள் விரும்பும் கதையை அங்கேயே அமர்ந்துகூட எழுதலாம் அல்லது வீட்டிலிருந்தே எழுதியும் கொண்டு வரலாம்.

சிறார் இதழ்கள் தும்பி, பஞ்சுமிட்டாய், பூவுலகு மின்மினி மற்றும் குட்டி ஆகாயம் இணைந்து வைக்கும் இந்த கதைப்பெட்டிக்குள் எல்லா நட்சத்திரங்களின் கதைகளும் விழ வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கான இந்த முயற்சியை நிறைய குழந்தைகளிடம் சேர்க்க வேண்டும். சேகரிக்கப்படும் கதைகள் சிறார் இதழ்களிலும் புத்தகங்களிலும் ஓவியத்தோடு சேர்ந்து உங்களைத் தேடி மீண்டும் வந்து சேரும்.

முகவரியையும் தொலைபேசி எண்ணையும் மறக்காம பதிவு செய்யவும்.

விபரங்கள்
97317 36363
98434 72092வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)