பதிவு செய்த நாள்

25 ஜன 2018
07:01
இரும்புத்திரை நாட்டுக்குள் ஒரு சாலைவழிப் பயணம்

  இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யாவின் மீது உலகின் பார்வை திரும்பியது. ஸ்டாலின் அடுத்துப் பதவியேற்றிருந்த நிகிதா க்ருஷ்சேவ்வின் ஆட்சியில் பிரான்ஸ்  நாட்டின் பத்திரிகை நிருபரான டோம்னிக் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜீனொ பெர்ரேவும் தத்தம் மனைவிமாருடன் ரஷ்ய மண்ணில் சாலைப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். கடும் அரசியல் சூழலில், இரும்புத் திரை கொண்டு மறைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஊடே முதல் முதலாக ஒரு திரில் பயணம். ரஷ்யாவோ இவர்களின் பயணத்தைக் கொண்டு உலக அரங்கில் சரிந்திருக்கும் தன் பெயரை சரி செய்து கொள்ளப்பார்க்கின்றது, அதேவேளையில் வந்திருப்போர் உளவாளிகளா? என்ற பதட்டமும் அதிகாரிகள் மத்தியில் இல்லாமல் இல்லை. 

ஒரு திரில் நாவலை படித்துக் கொண்டிருக்கும் பதட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கின்றது. அதேவேளையில் சில நெகிழ்ச்சியான தருணங்கள், மனிதம் என்று வாழ்வியலின் அழகான பக்கங்களையும் புரட்டுகின்றது.  ரஷ்யாவை எந்த இடத்திலும் ஏற்ற இறக்கத்துடன் பதிவு பண்ணாமல், உண்மையை எந்தச் சுழிவுமின்றிப் பதிவு செய்து, நாமும் உடன் பயணிக்கும் அனுபவத்தை வழங்குகின்றது. ரஷ்யா பொருளாதார ரீதியில் தன்னை கட்டியெழுப்ப எவ்வளவு சிக்கலான  செயல்களையும் செய்ய தாயாராய் இருந்தது என்பதற்கு இதில் மறைமுக குறிப்புகள் சில புதைந்துள்ளன. புத்தகத்தின் நடுவே பயணத்தின்பொழுது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 

-அகிலேஷ் சூரவல்லி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)