பதிவு செய்த நாள்

26 ஜன 2018
10:53

   ‘தி ஸ்பிரிட் ஆப் த அன்பார்ன்’ ஆங்கில நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னை காஸ்மோபாலிட்டன் க்ளப்பில் நடைபெற்றது. மருத்துவர், கிரிஷ் ராமசுப்பு எழுதிய அறிவியல் புனைவு நாவலை தினமலர் நாளேட்டின் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தமிழக ரயில்வே காவல்துறை, கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நூலினைப் பெற்றுக்கொண்டார். நூலினை வெளியிட்டுப் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “ஒரு மருத்துவர், நாவல் எழுதி இருந்தாலும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியல் தகவல்களை கதையுடன் கலந்து, எளிமையான ஆங்கிலத்தில் தந்துள்ளார்.  ஒரு குழந்தை கருவறையில் வளர துவங்கிய பின், அது அடையும் உணர்வு, உறுப்பு வளர்ச்சியை விவரிக்கும் இந்நாவல் வெளிநாட்டில் நடக்கும் கதையாக இருந்த போதும், இந்திய கலாசாரத்தை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும், இளைஞர்களின் தற்கால மனநிலையை விளக்குவதாக, இந்த நாவல் அமைந்துள்ளது.” என்றார். 

நுாலின் ஆசிரியர், கிரிஷ் ராமசுப்பு பேசும்போது, “ இந்தியாவில் பண்பாடு, கலாசாரம் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த ஒருவன், லண்டனில் வேலை செய்யும் போது, அங்குள்ள, ஐரிஷ் பெண்ணை திருமணம் செய்கிறான். அவளுக்கு, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதால், கருப்பின பெண்ணை வாடகை தாயாக அமர்த்துகிறான். நம் நாட்டு பெண்ணை மணக்காததால், வருத்தத்தில் இருந்த பெற்றோர், தன் மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அவனை அழைக்கின்றனர். கருவை சுமக்கும் பெண்ணும் இந்தியா வருகிறார். அவர் சந்திக்கும் காட்சிகளை, கருவறையில் இருந்த குழந்தை உணர்கிறது. வெளிநாட்டிற்கு திரும்பி சென்றதும், கருப்பின பெண் விபத்தில் சிக்கி, மூளை செயலிழக்கிறாள். கருப்பையில் இருக்கும் குழந்தை எடுக்கும் முடிவே, கதையின் இறுதிப்பக்கங்களில் பேசப்படுகிறது. இந்த நாவலை ஒரு மருத்துவ அறிவியல் கலந்த புனைவுக் கதையாக எழுதியிருக்கிறேன்” என்று தன்னுடைய நூல் குறித்துப் பேசினார். 

இன்னும் பிறக்காத குழந்தையின் பார்வையில் நிகழும் இந்த நாவலை நோஷன் பிரஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 312 பக்கங்கள் கொண்ட இந்நூலினைஅமேஸான் தளத்தின் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)