பதிவு செய்த நாள்

26 ஜன 2018
11:36

  டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவரது கட்டுரைகளை 25க்கும் மேற்பட்ட மொழிகளில் யுனஸ்கோ நிறுவனம் பதிப்பித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் உலக நாடுகளின் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, தமிழகத்தின் பண்டைய நாகரிகச் சிறப்புகளை சான்றுகளோடு உலகுக்கு உணர்த்தியவர். 13 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வெட்டு, தொல்லியல் துறை தொடர்பான பயிற்சிகள் அளித்து அவர்களை தமிழக கல்வெட்டுத்துறை ஆய்வின் பக்கம் திருப்பியவர். இதன் காரணமாக தமிழகம் முழுக்கக் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் ஏராளம். 

மதுரை திருமலை நாயக்கர் மகாலை சீர்படுத்தி வரலாற்றுச் சின்னமாக பழமை மாறாமல் பொலிவுபடுத்தியது, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் ஹரிஹர்ர், லிங்கோத்பவர் சிற்பங்களைக் கண்டறிந்தது, கல்வெட்டுகளில் இருந்த  ‘எருகாட்டூர் கோன் பெருந்தச்சன்’  எழுத்துக்களை வாசித்தறிந்ததன் மூலம் முதல் குடைவரைக் கோயில் பல்லவர்களுக்கு முன்பாக பாண்டியர்களால் உருவாக்கப் பட்டது என அறிவித்தது வரை இவருடைய பணிகள் ஏராளமானவை. சேக்கிழாரின் பெரியபுராணம் ஆய்விற்காக தமிழக அரசின்  கலைமாமணி விருது பெற்ற டாக்டர். இரா.நாகசாமியின், தொடர்ந்த பண்பாட்டு பங்களிப்பிற்கான இவ்வாண்டின் பத்ம பூஷண் விருது  மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இரா.நாகசாமி
இரா.நாகசாமி


 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)