பதிவு செய்த நாள்

27 ஜன 2018
12:09

   வ்வாண்டுக்கான மீறல் இலக்கியக் கழக விருது மற்றும் அவ்வை, கபிலர் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்து,பெண் விடுதலை,பெண் அரசியல் வெளிகளில் இயங்கும் கவிஞர் சுகிர்தராணிக்கு மீறல் இலக்கியக்கழக அவ்வை விருதும், நவீன எழுத்துச் சிந்தனையோடு செயல்படும் சு,சண்முகம் அவர்களுக்கு மீறல் இலக்கியக் கழக கபிலர் விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இலக்கிய, சமூகம், மனிதப் பண்பாட்டுக்கான மனிதநேய விருது கவிஞர் இராதே  மற்றும் சீறாளன் ஜெயந்தன் இருவருக்கும் வழங்கப்படவுள்ளது. கவிஞர்கள் அய்யப்ப மாதவன், பாலைவன லாந்தர் இருவருக்கும் அவர்களது படைப்புகளுக்காக மீறல் இலக்கியக் கழகத்தின் பாரி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் தலா 10 ஆயிரம், 5ஆயிரம் பணமுடிப்புகளைக் கொண்டடங்கியது. 

இவ் அறிவிப்பினை மீறல் இலக்கியக் கழக அமைப்பாளர் கவிஞர் இளங்கவி அருள் அறிவித்தார். விருது வழங்கும் விழா பற்றிய விபரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)