பதிவு செய்த நாள்

27 ஜன 2018
13:50

 சந்தன வீரப்பனின் நிஜ பின்னணியை உலகறியச் செய்த சாதனை நக்கீரன் முதுநிலைச் செய்தியாளரான சிவசுப்பிரமணியனுக்குச் சொந்தமானது. அதனை அங்கீகரித்துச் செய்தியாகத் துணிவுடன் வெளியிட்ட பெருமை நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு உரியது. 

வீரப்பனை எப்படியாகிலும் பிடித்து விட அல்லது முடித்துவிடப் பெரும்பாடு பட்டு அல்லலுற்ற தமிழக, கர்நாடக அரசுகள் நக்கீரன் ஆசிரியர் கோபால், செய்தியாளர் சிவசுப்பிரமணியன் இருவர் மீதும் அடுத்தடுத்து பல்வேறு பொய் வழக்குகளைப் புனைந்து, கைது செய்து சிறையிலடைத்துச் சித்திரவதைக்கு ஆளாக்கின.  

சிறையில் தான் பட்ட வதைகளையும், நெஞ்சுறுதியோடு அதை எதிர்கொண்டு சட்டப் போர் நடத்திப் பொய் வழக்குகளில் இருந்து மீண்டு வந்த விதத்தையும் அழகுத் தமிழில் சுவை குன்றாத நேர்த்தியோடு புத்தகமாக்கியுள்ளார், சிவசுப்பிரமணியன். இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் 28.01.2018.ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு சேலம் புதிய பேருந்துநிலையம் எதிரிலுள்ள வசந்தம் ஹோட்டலில் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சியில்,  கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு நூல் திறனாய்வுச் சிறப்புரையாற்றுகிறார்கள். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)