தலைப்பு : புதையல் டைரி
ஆசிரியர் : யெஸ்.பாலபாரதி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

29 ஜன 2018
18:26

  புதையல் டைரி நாவல் சிறுவர்களுக்கானது. ஏழாம் வகுப்புப் படிக்கும் ஜான்சன் என்ற சிறுவனுக்கு அவனுடைய தாத்தாவின் டைரி கிடைக்கிறது. அதில் ஒரு புதையல் பரிசு பற்றி தகவலைப் புதிர்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறார். தன் நண்பர்களுடன் புதிருக்கான விடையைத் தேடி பயணமாகிறான். அவனுக்குப் புதையல் கிடைத்ததா? அது என்ன புதையல் என்பதுதான் இந்த நாவலின் பயணம்.

நூலின் இறுதியில் இன்னும் சில புதிர்களையும் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர். இவற்றை நண்பர்களுடன் விளையாடலாம் அந்த வகையில் சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல் எழுதியிருக்கிறார். சிறுவர்கள் இதைக் கதையாக நினைத்துப் படித்தால் கதையாகவும், விடுகதையாக நினைத்துப் படித்தால் விடுகதையாகவும் இருப்பது தனிச்சிறப்பு.

ஆக மொத்தத்தில் புதிர்களைக் கண்டுபிடித்து புதையலை அடைவதுதான் புதையல் டைரியின் கதை. புத்திசாலித்தனமாகவும், பக்குவமாகவும் புதையலை அணுகுவதுபோல, கதையின் சிறுவர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். எளிமையான நடை, கஷ்டப்படுத்தாத வார்த்தைகள், ஓவியர் மகேஸின் கதைக்குப் பொருந்தும் ஓவியங்கள் மிகச் சிறப்பு. வாசிப்பை விளையாட்டாகவும் விளையாட்டை வாசிப்பாகவும் சிறுவர்கள் ஆரம்பிக்க நல்ல திறப்பாக இது இருக்கும்.
- மனோ ரெட்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)