பதிவு செய்த நாள்

31 ஜன 2018
11:46

நாம் பொதுவாக தமிழ் எழுத்துகளை உச்சரிக்கும்போது  ரெண்டு சுழி ன, மூனுசுழி ண என்று சொல்லுவோம். ஆனால் தமிழ் எழுத்துகளில் ரெண்டுசுழி ன என்பதும் தவறு!  மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்.
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு டண்ணகரம் என்று பெயர்.
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு றன்னகரம் என்று பெயர்.
இது இரண்டும்  என்றுமே மாறி வராது. இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!  (வர்க்க எழுத்து என்றால்,  சேந்தே வருகிற எழுத்து!)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)  இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்  எழுத்துப் பிழையும் குறையும்.
எப்படி?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்...பக்கத்துல் ட இருக்கிறதா அப்போ இங்கே மூனு சுழி ண தான் வரும். ஏனென்றால் அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்...பக்கத்தில் ற இருக்கிறதா...அப்போ இங்க இரண்டு சுழி ன தான் வரும்.
ஏனென்றால் அது றன்னகரம்.
இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இந்த ந் எழுத்தை அடுத்து  வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)