பதிவு செய்த நாள்

31 ஜன 2018
12:41

 னியார் கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விருது தேர்வுக்குழு
விருது தேர்வுக்குழு

புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வடகரை என்ற நூலுக்காக டாக்டர் ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது. பாரதியார் கவிதை விருதுக்கு பா.முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது உதயசங்கருக்கும், ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது ராமச்சந்திரனுக்கும் வழங்கப்படவுள்ளன. பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருதுக்கு பா.மு.நடராஜனும், ஆனந்த குமாரசாமி கவின்கலை விருதுக்கு சுப்ரமணியனும் தேர்வாகியுள்ளனர்.

விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதை முற்றத்துக்கரடி என்ற நூலின் ஆசிரியர் அகளங்கன், அப்துல்கலாம் இளம் ஆய்வறிஞர் விருதை பா.திருஞானசந்பந்தம் ஆகியோர் பெறுகின்றனர். பரிதிமாற் கலைஞர் விருதை பேராசியர் செல்லப்பனும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருதை பேராசியர் கந்தசாமியும் பெற உள்ளனர். தமிழ்க்கலை இலக்கிய துறைகளில் சிறப்பாக செயலாற்றி வரும் திறமை மிக்கோரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான 12 விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தமிழ்ப்பேராயம் தெரிவித்துள்ளது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)