பதிவு செய்த நாள்

01 பிப் 2018
17:49

 12 சிறுகதை ஆசிரியர்களின் ஒவ்வொரு சிறுகதைகளைக் குறித்தும், அதன் உள்கட்டமைப்பு, இயக்கம், இலக்கியப் பார்வை அது எப்படிக் கலையாக மாறுகிறது என்ற வாசிப்பனுபவத்தைத் தரும் நூல் விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு எனும் புதிர்’ நூல்.  

கதை என்பது என்ன? அது ஏன் மறைந்து இருந்து பொருளுணர்த்த வேண்டும். கேளிக்கை எழுத்தாளர்களிடம் இருந்து தேர்ந்த இலக்கியவாதி எப்படி வேறுபடுகிறான் என்று குழந்தைக்கு நடக்கப் பழகுவதுபோல விளக்கி இருக்கிறார் விமலாதித்த மாமல்லன். சில நேரங்களில் இந்தக் கதையில் இவ்வளவு நுட்பங்கள் இருக்கிறதா என்று வியப்பு தோன்றக்கூடும். இத்தொகுப்பின் வடிவத்தில் பெரிய முரண்பாடு முதலில் கதையைக் குறித்த நூலாசிரியரின் பார்வையும், பிறகு கதையும் இடம்பெற்றிருப்பதை முன்பின்னாக மாற்றியமைத்திருந்தால் வாசக அனுபவத்தின் பிறகு ஒப்பீடுகளுக்குள் நுழைய முடியும். 

“நான் நாவலை படித்துவிட்டுத் தான் முன்னுரையை வாசிப்பேன்” என்று எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் குறிப்பிடுவதுபோல  வாசகருக்கும் அதுபற்றிய கருத்து இருக்கும் எனக் கவனத்தில் கொண்டிருக்கலாம். நூலில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கு.பா.ரா., ஜி.நாகராஜன் பற்றி  எழுதப்பட்டிருக்கும் வரிகள் மிகவும் ஈர்க்கின்றன.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)