பதிவு செய்த நாள்

02 பிப் 2018
17:30

  றைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் கலந்துகொண்ட சிறுகதைத் தொகுப்புகளைத் தேர்வு செய்து, அதற்குப் பரிசினை அறிவித்திருக்கிறது தேர்வுக் குழு.

2017 ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க மூன்று தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து ( அது அந்த எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்) மூன்று தொகுதிகளுக்கும் தலா 10,000 ரூபாய் பரிசும் சான்றிதழும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறுகதைத் தொகுதிகள்
1. டொரினா - கார்த்திக் பாலசுப்ரமணியன்
2. கேசம் - நரன்
3 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 - ரமா சுரேஷ்
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, வரும் ஞாயிறு (04-02-2018) மாலை 5-30 மணிக்கு கவிக்கோ மன்றம், மயிலாப்பூரில் நிகழவிருக்கும் க.சீ.சிவகுமார் நினைவலைகள் நிகழ்வின்போது பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)