பதிவு செய்த நாள்

06 பிப் 2018
16:22

சிங்கப்பூர் அரசாங்கம், நிர்வாக மற்றும் மக்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலம் - தமிழ் சொல்வளக் கையேடு வெளியிட்டிருக்கிறது. பிப்ரவரி 3ம் தேதி சிங்கப்பூரில் உள்ள இந்தியப் பாரம்பரிய மையத்தில்  தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சீ ஹாங் டட் இந்தக் கையேட்டை வெளியிட்டார்.

ஏற்கனவே இருக்கும் அகராதியில் பொதுவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கின்றன. அதனால் அதனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தமிழ் அதற்கு ஏற்ற ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட 4000 வார்த்தைகளுடன் இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த அகராதி, பள்ளி, கல்லூரி, காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கு மிகவும் பயன்படும் வகையில்  இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மொழியில் தமிழும் இருபதால் சட்டம், பள்ளி, அரசு ஆவணங்களில் ஒரே பொருளுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். இதனால் சொற்களினால் ஏற்படும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறியுள்ளார். இந்தப் பணியில் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ் வளக் குழு, தமிழ் மொழி கவுன்சில் ஆகிய அமைப்புகள் ஈடுபட்டன. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)