தலைப்பு : மகாபாரதம்
ஆசிரியர் : பாலகுமாரன்
பதிப்பகம் : திருமகள் நிலையம்
விலை : 390/-

பதிவு செய்த நாள்

07 பிப் 2018
00:13

  நம் ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள், மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தி திரெளபதி. அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. குருஷேத்திரம் என்பது ஓர் ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே இருக்கிறது. காமம், குரோதம், லோபம், மூர்க்கம், மதம், மாச்சரியம் என்று ஆறு குணங்களால் மனிதன் அவதிப்படுகிறான். இதில் காமம் என்பது துரியோதனன், திரெளபதியை விரும்பியவன். குரோதம் என்பது கர்ணன், தெய்வத் தன்மை நிரம்பினாலும் பாண்டவர்கள் மீதுள்ள பொறாமையால் நாசமானவன். லோபம் சகுனி. மதம் துச்சாதனன். கெளரவர்கள் பக்கமிருந்த பீஷ்மர், துரோணர், கிருபர், அசுவத்தாமா இவர்கள் ருசி, ரச வாசனை. ‘புலன்களைத் தூண்டும் நல்லவைகள் போலத் தோன்றும் இவையும் கெட்டவைகள்.  பஞ்ச பூதங்களால் உணரப்படும் நல்லவை போல் தோன்றும் விஷயங்களை, தீயதான காமக் குரோதங்களை ஒடுக்கி, உயிர்ச்சக்தியை ஒருவன் வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை. இவைகளைப் பின்பற்றித் தொடர்வது, மரணத்திற்குப் பின்னாலும் ஆத்மாவின் நற்பயணத்தை பூர்த்தி செய்யும் என்பதை விளக்குவதே மகாபாரதம் என்று இந்நூலில் உணர்த்துகிறார் பாலகுமாரன். 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)