அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'பச்சை நரம்பு'. முதலாவது “சிறுகதைப் புத்தகம்” என்ற தலைப்பில் யாழ்பாணத்தில் வெளியானது. அனோஜன் யாழ்பாணம் அரியாலையைச் சேர்ந்த 25வயது இளைய தலைமுறை எழுத்துக்காரர். அவரது பச்சைநரம்பு சிக்கலற்ற நல்ல மொழிவளத்துடன் கூடியது, அண்மையில் வெளியான புதிய எழுத்தாளர்கள் எவரைக் காட்டிலும் சிறுகதை வடிவம் சார்ந்த தேர்ச்சியும் புரிதலும் அனோஜன் கதைகளில் காணக் கிடைக்கிறது. முதல் வாசிப்பில் பலி, கிடாய், வாசனை,400 ரியால் கதைகள் ஈர்க்கின்றன. குறிப்பாக 400 ரியால் அதிர்ச்சியூட்டும் களம். வெளிதல் என்றொரு கதை பாலியல் தொழிலாளியின் வழமையான சித்தரிப்புகளுடன் அடங்கியது. அதிலும் கூட உள நுட்பங்களைக் காட்டி இருக்கிறார். பிற கதைகளும் கவனிக்கத்தக்கவை. வருங்காலங்களில் அனோஜன் தனித்துவமான எழுத்தாளராக மிளிர்வார்.