பதிவு செய்த நாள்

07 பிப் 2018
10:24

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்தவர் கார்த்திக் பால சுப்ரமணியன். கோவையில் கல்லூரிப் படிப்பு முடித்து, நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் பணிநிமித்தம் வசித்துவந்து, தற்போது சென்னைக்கே இடம்பெயர்ந்திருப்பவர். வாசிப்பின் பலத்தோடு, அனுபவங்களைக் கதைகளாகத் தேர்ந்தெடுக்கும் கார்த்திக் பாலசுப்ரமணியன் சிறுகதைகள் இவ்வாண்டு யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீட்டில் முதல் தொகுப்பாக வெளியாகியுள்ளது. ‘டொரினா’ சிறுகதைத் தொகுப்பின் சிறப்பான கதை ‘இருகோப்பைகள்’ எழுதிப் பழகிய கைகளின் தேர்ந்த லாவகமும், செறிவும் அமைதியும் ஒருங்கே அமைந்த கதையும் கூட. கதாப்பாத்திரங்களின் மனவோட்டங்களுக்கும் மனவெழுச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும் கதைகளாக இவரது ‘யயகிரகணம்’, ‘பார்வை’ மற்றும் ‘டொரினா’ ஆகியவற்றைச் சொல்லலாம். 

கார்த்திக் பாலசுப்ரமணியன்
கார்த்திக் பாலசுப்ரமணியன்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)