பதிவு செய்த நாள்

07 பிப் 2018
11:07

 பவள சங்கரியின் கந்திற்பாவை கவிதை நூலும், கொரிய வளமும், தமிழ் உறவும் ஆய்வு நூலும் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கவிக்கோ.கோ.விசுவநாதன் தலைமையில் இன்று காலை வெளியானது. இந்நிகழ்வில் ஈரோடு.தங்க விசுவநாதன், அ.குகேச சங்கரன், புலவர் வே.மதுமனார், பேரா. அப்துல்காதர், திரு.மு.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கவிதை நூல் குறித்து ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் இரா.சிவகுமாரும், கொரிய ஆய்வு நூல் குறித்து வைகை இலக்கியக் கழகத் தலைவர் மு.சிதம்பர பாரதியும் அறிமுக உரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, ப.முத்துகுமாரசாமி, எஸ்.எஸ்.எம்.மதிவாணன், வெ.ஜீவானந்தன், அண்ணா கண்ணன், சிவானந்தம், ஓவியர் ஜீவா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். 

நிகழ்வை கவிஞர் தமிழன் ராகுல் தொகுத்து வழங்க எழுத்தாளர் பவள சங்கரி திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்வு ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக தமிழியக்கம் அமைப்பு உருவாக்கக் கலந்துரையாடல் கூட்டம் இதே வளாகத்தில், கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் தலைமையிலும், மக்கள் சிந்தனைப் பேரவை த.ஸ்டாலின் குணசேகரன், முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் செ.ர.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழியக்கம் மீண்டும் தொடர அமைப்பு ஒன்று அதன் பெயரில் உருவாக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வினை வேலூர் தமிழ்ச்சங்க அறக்கட்டளை சார்பாக கோ.விசுவநாதன், வே.பதுமனார், பேராசிரியர் அப்துல்காதர், மு.சுகுமார், எழுத்தாளர் பவள சங்கரி ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)