பதிவு செய்த நாள்

07 பிப் 2018
12:24

             திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுகிராமமான தக்களூரைச் சேர்ந்தவர் புதுமுக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப். தற்சமயம் திருத்துறைப்பூண்டி அஞ்சல்துறையில் பணிபுரிந்துவரும் இவரது முதல் நாவல் ‘ஒளிர்நிழல்’ கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. முன்பாக ‘நாயகிகள் நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பு அதேயாண்டு செப்டம்பரில் வெளியானது.புனைவெழுத்தின் உள்ளடக்கங்களுக்குள் தனது கதாபாத்திரங்களைக் கூண்டிலேற்றி, அவற்றை தத்துவ விசாரணைக்கு உட்படுத்தும் விதமாக இவரது சமீபத்திய கதைகள் உள்ளன. ஆதவன் கதைகளில் நிகழும் உளவியல் பகுப்பாய்வை ஒத்த கூறுகளோடு சுரேஷ் பிரதீப்பின் கதைமாந்தர்கள் வெளிப்படுகிறார்கள். அதேசமயம் உளவியல் பகுப்பு, வெறுப்பின் அக புற ஊற்றுமுகங்களைக் குறித்த வாதம் ஆகியவற்றுள் மட்டுமே ஈடுபடாமல் நாவல், சிறுகதையென கதையாக்கும் கூறுகளையும் கையாளத் தெரிந்தவராக எழுதத் துவங்கியிருக்கிறார் சுரேஷ் பிரதீப். 

சுரேஷ் பிரதீப்
சுரேஷ் பிரதீப்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)