பதிவு செய்த நாள்

07 பிப் 2018
15:28

விரல்மொழியர்’ எனத் தன்னுடைய புதிய மின்னிதழுக்குப் பெயர் இட்டிருக்கிறார் சரவண மணிகண்டன். பார்வையற்ற திறனாளிகளின் வாசிப்புக்கென இயங்கும் பள்ளி ஆசிரியரான இவர் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து துவங்கிய இந்த இணையதளம் மூலம் விரல்மொழியர்களும் இலக்கியப் பிரதிகளை வாசிக்க ஏதுவான சூழலை உருவாக்கித் தந்திருக்கிறார்.
            நவீன தொழில்நுட்ப யுகத்தில் பார்வையற்ற திறனாளிகளுக்காக வாசிப்புப் பலகைகள், சொல்திறன் மடிக்கணினி, டேப்லட் ஆகியவை அவர்களது வாசிப்புக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப் படுகின்றன. ஆனாலும், பரவலாக வாசிக்கப்படும் சிறுசஞ்சிகைகளின் பிரதிகளை யுனிகோட் எழுத்துருக்களாக இல்லாமல் இமேஜ் மற்றும் பி.டி.எஃப் வடிவிலே பெற முடிவதால் அதனை அவர்களால்  இயக்கவோ வாசிக்க இயலாது. இந்தச் சூழலை மனத்தில் கொண்டு தங்களைப் போன்றவர்களுக்கென தனி இதழை திரைமொழி வாசிப்பான் உதவியோடு மின்னிதழாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர் சரவண மணிகண்டன். இம்மின்னூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது.   

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)