தலைப்பு : முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்
ஆசிரியர் : கௌதம சித்தார்தன்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : 40

பதிவு செய்த நாள்

08 பிப் 2018
16:55

  தமிழ் நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனை மெல்ல மெல்ல தமிழ் நிலப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒதுக்கிவைத்து, விநாயகனை தேசம் முழுமைக்கும் பொதுமைப்பட்ட கடவுளாக மாற்றுவது, அப்படியான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளிய தன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல், எளிய மக்களிடையே எதிர்வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது, தங்களது வைதீகக் கருத்துகளை ஓங்கி இலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும் என்கிறார் கௌதம சித்தார்தன். மூன்றாம் உலக அரசியல் என்ற தலைப்புக்கும் நூலின் உள்ளடக்கத்திற்கும் உள்ள தொடர்புகளைக் கண்டறிய முடியாதபோதும், முருகன், விநாயகன் எனும் பிம்பங்களின் ஞான மார்க்கங்களை, அதன் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை, சங்க இலக்கியம், செவ்வியல் வளர்ச்சி, நாட்டார் தொன்மங்கள், வழக்காறுகளின் வழியாகக் கேள்விக்குட்படுத்துகிறார். 

கௌதம சித்தார்தனின் கட்டுரை மொழி சிக்கலற்று எளிமையாக இருக்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள அவரது ஒரே கட்டுரை முருகனையும், விநாயகனையும் குறித்த நீண்ட  வரலாற்றுப் படிமங்களை அறிமுகப் படுத்தவே முனைகிறது. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)