பதிவு செய்த நாள்

10 பிப் 2018
10:52

கரம் இரவுகளை நம்மிடமிருந்து விலக்கிவிட்டது. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கருவியாக நம்மை நுகர்வினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழல் உருவாக்கி வைத்து இருக்கிறது .அவ்வப்போது நண்பர்களுடன் ஒன்றுகூடி நிலவின் ஒளியில் ஆடி பாடி , ,கலந்துரையாடி கூட்டாக உண்ணும் தருணங்களே இல்லாமல் போய்விட்டது ..இந்த நகரம் நமக்கான பொழுதுபோக்கையும் தன்னுடைய வணிகம் சார்ந்தே நம்மைப் பயன்படுத்திக்கொண்டது . மால்களும், திரையரங்குகளும் , ரிசார்ட்களும்,உணவகங்களும் தான் இன்றைக்கு நண்பர்களுடன் ஒன்றுகூடி பொழுதுபோக்கை கழிப்பதற்கான இடமாக மாறிவிட்டது ..

நேரமும் உழைப்பும் பெருந்தொகையும் செலவிட்டே நமக்கான மகிழ்ச்சியைப் பெற்றுவரும் நிலையில், மனநிறைவுடன் கூடிய கொண்டாட்டத்திற்கான ஓர் ஆக்கபூர்வமான ஒன்றுகூடலை முன்னெடுத்திருக்கிறார்கள் அகத்தி குழுவினர்.   

ஒவ்வொரு காலகட்டத்திலும் இச்சமூகத்தின் பெரும்மாற்றத்திற்கு வித்தாக கலையும், அதனை முன்னெடுத்துச் செல்லும் கலைஞர்களும் இருந்து வருகின்றனர். மக்களையும் கலையையும் இணைக்கும் ஓர் நகரத்தின் இரவு திருவிழாவாக ‘இராக்கூடல்’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்நிகழ்ச்சியில், கானா பாடல்கள் , கருத்தினை முன்மொழியும் நகைச்சுவை துணுக்குகள் , 

இலக்கிய வாசிப்புக்கூட்டம்,  நாடகம், குழு நடனம், ஆவணப்படம், திரைப்படங்கள் திரையிடல் எனப் பல்வேறு படிவங்களில் ஒவ்வொரு மாதமும் இக்கூடல் நிகழ்வு இருக்கும். கூடவே சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி கொண்டு செய்யப்படும் சிறுதொண்டி உணவும் வழங்குகிறார்கள்.  நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணங்கள் ஏதுமில்லை. 

நாள் : கும்பம் 5 (சனிக்கிழமை 17-02-18) 

நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை 

இரவு தங்குவதற்கு இடமுண்டு .. 
இடம் : 

எண் 20 , அகத்தி தோட்டம் , 

ரோடு ,ஆவது குறுக்கு தெரு (BSNL அலுவலகம் எதிரில் ) 

கிழக்கு தாம்பரம் ( கல்லூரியில் இருந்து 500 மீட்டர் தொலைவில்) 

சென்னை. தொடர்புக்கு : 8056136769,9940220091வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)