பதிவு செய்த நாள்

10 பிப் 2018
13:50

பிறப்பு: 1930, ஜூலை 10 
சொந்த ஊர்: கும்பகோணம்

குறிப்பு:

‘குருதிப்புனல்’ நாவலுக்காக 1978ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத அகாடமி விருது பெற்றவர். இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே. ‘மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘நந்தன் கதை’ போன்றவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. கும்பகோணத்தில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் பணியாற்றிய பள்ளியில் அவரிடம் கல்வி பயின்றிருக்கிறார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.  போலந்து, வர்சா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

நாடக நூல்கள் - மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத்தீ, பசி, கோயில்.

இவரின் பிற முக்கியமான நூல்கள் - ஏசுவின் தோழர்கள், காலவெள்ளம், சத்திய சோதனை, ஒளரங்கசீப், குருதிப்புனல், தந்திர பூமி, சுதந்தர பூமி, வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, Ashes and Wisdom, மாயமான் வேட்டை, ஆகாசத் தாமரை, கிருஷ்ணா கிருஷ்ணா, அக்னி, தீவுகள், வெந்து தணிந்த காடுகள், வேர்ப்பற்று, Wings in the Void, Into this Heaven of Freedom, திரைகளுக்கு அப்பால், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)