பதிவு செய்த நாள்

10 பிப் 2018
14:29

 டிய இலக்கியத்தின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளராக இருந்தவர் சந்திரசேகர் ராத்.  ஒடிய வட்டார வழக்கின் மூலம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். 1997ம் ஆண்டு ‘சபுதரு திர்கராதி’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் ஒடிசா சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். இலக்கிய துறைக்கு இவர் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு இவரது பெயரை தேர்வு செய்திருந்தது.

1929ம் ஆண்டு பலாங்கிர் மாவட்டம் மலபடா கிராமத்தில் பிறந்தார்.  ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)