தலைப்பு : புலி கிலி சிறுவர் கதைகள்
ஆசிரியர் : நீதிமணி
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன்
விலை : 100/-

பதிவு செய்த நாள்

13 பிப் 2018
11:49

ட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இப்புத்தகத்தை தாராளமாகக் கொடுக்கலாம். அல்லது இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை, அதேநேரம் கதை கேட்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கான இலகுவான கதைப்புத்தகம் “புலி கிலி கதைகள்”

முழுக்க முழுக்க புனைவு மற்றும் நாடோடிக் கதைகளைக் கொண்ட புத்தகம். ஆனால், கொண்டாட்டமானத் தொகுப்பு. குறிப்பாக புலி் கிலி, மிளகுக் கொடி, வால் இல்லாத நாய்க்குட்டி போன்றே சிறுகுறுங் கதைகள் நீட்டி முழக்கி கற்பனைகள் சேர்த்து சொல்வதற்கான வசதிகளோடு எழுதப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளான ஒருபக்கக் கதை அளவுக்கு எளிமையான வாசிப்புக்கு உதவுகின்றன.

இக்கதை நூலை எழுத்தாளர் நீதிமணி தனது குழந்தைமையின் வாயிலாகப் படைத்திருக்கிறார். கதைகளுக்கு ஏற்ப வண்ண ஓவியங்களை ஓவியர் வாசன் செய்திருக்கிறார். நிச்சயம் குழந்தைகள் கதை வரிசையில் இந்தப் புத்தகத்திற்கு தனியிடம் உண்டு. 

- இனியன்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)