பதிவு செய்த நாள்

15 பிப் 2018
12:46

ந்திய உணவு சந்தை பலஆயிரம் கோடிகள் புழங்கும் மிகபெரும் சந்தை. நாம் என்ன உண்ண வேண்டுமென்பதை அமெரிக்கா போன்ற நாடுகளே தீர்மானிக்கின்றன. இப்படியான வெறும் பிரசங்கங்கள் மட்டுமே செய்யாமல் எதனால் இவ்வாறு நேர்ந்தது. இதன் துவக்கபுள்ளி மற்றும் இதை நாம் எவ்வாறு அணுகுவது போன்ற தகவல்களையும் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் வாயிலாக ருசிக்கும்படி கூறுகிறார். தன் குடும்பத்துடன் பன்னாட்டு உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்தவர். அங்கு கொடுக்கப்படும் மெனு கார்டு முதல் சமையலறையில் பணிபுரியும் செஃப் வரையான அனைத்து சமாச்சாரங்களின் பெயர் வரலாறும், உலகில் முதன் முதலில் அவை எங்கு யாரால் ஆரம்பிக்கபட்டது என்பதையும் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் அவையுடன் நமது பாரம்பரிய உணவின் பெயர்களையும் அதன் வரலாற்று தகவல்களையும் நாமே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் வகையில் கூறி ஆச்சர்யபடுத்துகிறார். 

இதே போன்று பன்னாட்டு ஹோட்டல் என்றில்லாமல் மரணவிலாஸ் (“HIGHWAY MOTELS”), நூடுல்ஸ் ராஜ்ஜியம், உயிர் குடிக்கும் டீ, ஓட்ஸ் அரசியல், “பகீர்” பானங்கள், தியேட்டரும் பாப்கானும், கரகாட்டகாரன் வாழைபழம், வாழைபழ யுத்தம் என மொத்தம் நாற்பது அத்தியாயமும் இப்படி ஈர்க்கும்படியான தலைப்பில் அதன் ஆதி முதல் அந்தம் வரை நம் உணவுமுறைகளுடன் அலசுகிறார். உணவின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமின்றி உணவை எடுத்துகொள்ளும் அனைவரும் ஓரளவேனும் உணவு சார்ந்து அறிந்து வைத்திருக்க வேண்டிய சமாச்சாரங்களே நிரம்பியுள்ள இப்புத்தகம் படிக்க மட்டுமின்றி நம் அடுத்தத் தலைமுறைக்கும் நாம் கொடுத்துச் செல்லவேண்டிய பொக்கிஷம்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)