பதிவு செய்த நாள்

15 பிப் 2018
15:42

 தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' சிறுகதையைச் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை மிகவும் பிடிக்கும். 
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன் - உண்மையில் ஓர் இணையற்ற மேதை. மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கிய 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டால், நமக்கும் மேலான சக்தி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் 'செல்லம்மாள்' கதையை எழுதியவர் நிச்சயம் அந்தக் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். 

புதுமைப்பித்தனே தான் எழுதிய 'காஞ்சனை' சிறுகதையில் தன்னை 'இரண்டாவது பிரம்மா' என்றும் 'நகல் பிரம்ம பரம்பரையின் கடைக்குட்டி' என்று அழைத்துக்கொள்கிறார். 

காஞ்சனை கதையை எழுதிய அதே வருடம் (1943) செல்லம்மாள் கதை எழுதப்பட்டிருக்கிறது. 
எழுதியது பிரம்மனாக இல்லாத பட்சத்தில், அந்த இரண்டாவது பிரம்மா உருவாக்கிய 'காஞ்சனை' பிசாசுதான் ஒருவேளை 'செல்லம்மாள்' கதையை எழுதியிருக்க வேண்டும். 

'காதல் கதை' என்று சொன்னேன். தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் அல்ல இது. வாசித்துப் பாருங்கள். நான் அப்படிச் சொல்வது ஏன் என்பது உங்களுக்குப் புரிய வரும். இந்தக் கதையில் வரும் 'பிரமநாயகம் பிள்ளை' கதாப்பாத்திரத்தை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது? குறும்படம் எடுக்க விரும்புபவர்கள் ஏன் இதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது? 
புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதை நூல்வெளி தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)