தலைப்பு : மதில்கள்
ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர், தமிழில் : சுகுமாரன்

பதிவு செய்த நாள்

17 பிப் 2018
14:48

லையாள நவீன இலக்கியத்தில் மிக அதிகம் சிலாகிக்கப்பட்டவரும் மிக அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் வைக்கம் முகம்மது பஷீராக இருக்கக்கூடும். இந்த இரண்டு நிலைகளையும் கடந்து இன்று இலக்கிய படிமமாக கொண்டாடப்படுகிறார். அவருடைய இலக்கியத்திற்கு அவர் தான் மூலப் பொருள், படைப்பு எல்லாம். அவர் எழுதியது தன் சொந்த வாழ்க்கையின் அனுபவம் தான்.

சுதந்திரப் போராட்ட காலத்தில அவர் சிறைக்கு சென்றது, பெண்ணைப் பார்க்காமலே காதல் வயப்படுவது. அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள்தான் மதில்கள்.

ஆண்கள் சிறைக்கும் பெண்கள் சிறைக்கும் இடையில் உயரமான மதில் சுவர் இருக்கும். இவர் சிறைச்சாலைக்குள் நுழையும் போதே ஒரு வித வாசம் வரும். அதே வாசனை இவர் சிறைச்சாலையினுள் மதில் சுவருக்குப் பக்கத்தில் நிற்கும் போதும் வரும். இந்தப்பக்கத்தில் இருந்து இவர் யார் என்று கேட்க, அந்த பக்கம் ‘நாராயணி’ என்று பதில் வரும். இப்படியே பேசி காதல் வந்துவிடுகிறது இருவருக்கும்.

எப்படியாவது சந்தித்தே ஆகவேண்டும் என்று, சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனையில் சந்திப்பதற்காக ஆயத்தமாவார்கள். நாளைக்கு எப்படியாவது நாராயணியை சந்தித்துவிடலாம் என்ற கனவில் இருந்தவருக்கு ஓர் அதிர்ச்சி. இன்று மாலை வார்டன் வந்து சொல்லுவார் ‘யூ கேன் கோ மிஸ்டர் பஷீர் யூ ஆர் ப்ரீ. ஹூ வான்ட்ஸ் ப்ரீடம். இந்த நிமிடம் முதல் நீங்கள் சுதந்திரமானவர் சுதந்திரமான உலகத்திற்கு நீங்கள் போகலாம்.’ என்று சொல்வார். இதோட வார்டன் அவரை சிறையிலிருந்து வெளியேற்றி சிறைக்கதவை பூட்டி விடுவார்.

சிறையிலிருந்தபோது, சிறைச்சாலையை ரோஜா வனமாக மாற்றி வைத்திருப்பார். மதிலுக்கு அப்பால் இருக்கும் நாராயணி, ரோஜா செடியைக் கேட்பாள்.. ஒவ்வொரு கிளையையும் வெட்டி அதில் இருக்கிற இலைகளுக்கும் பூக்களுக்கும் தன் முத்தங்களை பதித்து, மொத்தமாக கட்டி மதிலுக்கு அந்தப்பக்கம் வீசுவார். கடவுளின் பெயரைச் சொல்லி நட்டு வை நாராயணி என்று சொல்வார்.

இறுதியில் இப்படி முடித்திருப்பார். ‘நறுமணம் பரப்பும் சிவப்பு ரோஜாவை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு அந்தப் பெரும் பாதையில் அசைவில்லாதவனாக நின்று கொண்டிருந்தேன்.’

- நபிஸா சாகுல்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)