பதிவு செய்த நாள்

17 பிப் 2018
18:52

 அவர்கள் அவனது வாய்க்குப் பூட்டு போட்டார்கள்கைகளை மரணப் பாறையில் பிணைத்துக் காட்டினார்கள்

பின்னர் கூறினார்கள்.

நீ ஒரு கொலைகாரன் என்று.
அவனது உணவையும் உடைகளையும் 

கொடியையும் பறித்தார்கள். 

அவனை மரணச் சிறையில் வீசியெறிந்தார்கள்

பின்னர் கூறினார்கள்

நீ ஒரு திருடன் என்று.
எல்லா முகாம்களிலிருந்தும் 

அவனைத் துரத்தினார்கள்

அவனுடைய இளம் காதலியையும் 

பிடித்துக் கொண்டார்கள்

பின்னர் கூறினார்கள்

நீ ஒர் அகதி என்று,
இரத்தம் வடிக்கும்

கண்களும் கைகளும் உடையவனே !

நிச்சயம் இரவு விடியும்

சிறைச்சாலைகள் மிச்சமிரா

கைவிலங்குகளும் எஞ்சியிரா.
நீரோ இறந்துவிட்டான்

ரோம் இன்னும் இறக்கவில்லை.

அவள் தனது கண்களால் போரிடுகிறாள்.

இறக்கும் கதிரின் விதைகள்

விரைவில் பள்ளத்தாக்கைக்

கதிர்களால் நிரப்பும்.-பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)