பதிவு செய்த நாள்

17 பிப் 2018
19:25

சிலுவையில் தொங்கும் சாத்தான் என்ற இந்நாவல் கிக்கூயூ மொழியில் வெளிவந்து. மெளண்ட் கென்யாவிலிருந்து நைரோபி வரை கென்ய மக்கள் வீடுகளிலும் மற்ற பொது இடங்களிலும் கூடி கூடிப் படித்தார்கள்; வாய்விட்டு உரக்கப் படித்தார்கள். சிறை பிடிக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இதனை ஒரு வருட காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம் துடைக்கும் தாளில் எழுதி ரகசியமாகப் பாதுகாத்து வந்தார் கூகி. விடுதலை பெறுவதற்குச் சில வாரங்கள் முன்பு சிறைக் காவலரால் பறிமுதல் செய்யப்பட்ட நாவலின் பிரதி, பின்பு எதிர்பாராத விதமாக அவரிடமே திருப்பித் தரப்பட்டது! கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்டது. ஆங்கில வாசகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்நாவல். பின்பு ஆசிரியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்ட்டது. கூகி, சிலுவையில் தொங்கும் சாத்தான் நூலில் மேற்கத்திய குறியியலை தலைகீழாக நிற்க வைக்கிறார். மறுபுறம், அதன் வாலோ மாயத் தோற்றங்களுக்கும் மறுக்கவியலா உண்மைகளுக்கும் நடுவே, கனவுகளுக்குக் கடினமான உண்மைகளுக்கும் நடுவே கட்ட வீழ்கிறது. எழுத்தியல் முறைக்கு மாற்றாகப் பண்டைய ஒத்திசைவுடன் கூடிய மரபுவழி கதை சொல்லும் முறை நூல் முழுமையும் பயன்படுத்தப்படுகிறது. 

பிரக்ட்,புன்யான்,ஸ்விப்ட், மற்றும் பெக்கட்டின் ஆற்றல்களை உள்வாங்கிக் கூகி கலகம் செய்கிறார். இவ்வாறு பழமையும் புதுமையும் இரண்டறக் கலக்கப்பட்டுக் கென்ய மக்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டு விடுதலைக் கோரும் தெளிவான உணர்ச்சிப் பூர்வமான குரல் எழுகிறது.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)