டிஸ்கவரி புக் பேலஸின் ஏழாவது தேநீர் சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் பாலசந்தரின் உதவியாளரும், ஜெயகாந்தனின் தயாரிப்பாளரும், நடிகர் நாகேஷ் உட்பட்டவர்களின் நெருங்கிய நண்பருமான மா.அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். சிங்கப்பூரின் தொழிலதிபர்களில் ஒருவரான இவர் படைப்பிலக்கியத்திலும் பங்களிப்பு செய்தவர். கவிதைகள், நாவல், சிறுகதைகள் என இயங்கும் மா.அன்பழகனுடன் தமிழர் கலை, கலாசாரம், சினிமா, இலக்கியம் ஆகியவை குறித்து உரையாடும் விதமாக இத் தேனீர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பதிப்பாளர் வேடியப்பன் ஒருங்கிணைக்கிறார்.இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர், சென்னை.
நேரம் : மாலை 6.௦௦ மணி