பதிவு செய்த நாள்

19 பிப் 2018
18:33
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி

விருது புத்தகம் பகுதியில், சமகாலத்திலும் கடந்த காலத்தில் விருது பெற்ற புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தைச் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது  பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமியின் ‘விசாரணைக் கமிஷன்’ நாவல் குறித்த சிறிய அறிமுகம்.

இந்த நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் தங்கராசும், ருக்குமணியும்தான். இருவரும் கணவன் மனைவி. தங்கராசு பஸ் கண்டக்டர் வேலை செய்பவர். ருக்குமணி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணி செய்பவர். திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. வீட்டில் வளர்க்கும் டைகர் நாயின் மீதுதான் இவர்களின் அத்தனை அன்பும் பாசமும் நிறைந்திருந்திருக்கிறது.  தங்கராசு பல கெட்டவார்த்தைகள் பயன் படுத்தினாலும் தன் மனைவியை குழந்தையில்லை என்று ஒரு முறை கூட குறை சொல்லியதில்லை.

கதாபாத்திரங்களின் பேசுகளுக்கு நடுவேயே காலத்தைப் பதிவு செய்யும் சா.கந்தசாமியின் எழுத்து நுணுக்கம், நம்மை கதையினுள் ஈர்த்துவிடுகிறது. உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்’ என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம்.ஜி.ஆர கட்சிய விட்டு நீக்கிட்டாங்க என்பதும், 'இந்திர காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ' ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார்.

நாவலின் கடைசியாக வரும் அத்தியாயங்களில்தான் தலைப்பிற்குள் நுழைய முடிகிறது. காவல்துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதாரண சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதிலும் இந்த நாவல் நிற்கிறது.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)