பதிவு செய்த நாள்

20 பிப் 2018
15:59

க்கால வேந்தர்கள், கோவில்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்வதில் என்றுமே ஓய்ந்ததில்லை. மன்னர்கள் கொடுத்ததாலேயே இன்று நாடெங்கும் இவ்வளவு பெரும் ஆலகயங்கள், வரலாற்றின் மிச்சமாக விளங்குகின்றன.

திருவரங்கம் கோவில் தலவரலாற்றை விளக்குவது ‘கோவில் ஒழுகு’ என்னும் நூல். அதில், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், அக்கோவிலுக்கு வழங்கிய தான தருமங்கள் பற்றிய சுவையான செய்தி ஒன்று இருக்கிறது.

அந்த மன்னன் காவிரி ஆற்றில் இரண்டு படகுகளை மிதக்கவிட்டான். ஒரு படகில் சுந்தர்பாண்டியனது பட்டத்து யானை ஏற்றப்பட்டது. அந்த யானையின் மீது மன்னனும் ஏறி அமர்ந்துகொண்ட படகு தண்ணீரில் எவ்வளவு அமிழ்ந்ததோ, அதே அளவுக்கு மற்றொரு படகு அமிழும்வரை அதில் பொன்னும் வெள்ளியும் நவரத்தினங்களும் ஏற்றப்பட்டன.

அந்தப் பொருட்களைக் கொண்டு திருவரங்கக் கோவில் விமானத்திற்குத் தங்கமுலாம் பூசப்பட்டது. இச்செய்தியை வி.என்.ஹரிராவ் எழுதிய திருவரங்கக் கோவில் வரலாறு என்னும் ஆங்கில நூலில் காணலாம்.

சடையவர்மன் சுந்தரபாண்டியன், திருவரங்கத்துக்கு மட்டும் திருப்பணி செய்யவில்லை. சிதம்பரம் கோவிலுக்கும் திருப்பணி செய்துள்ளார். சிதம்பரம் கோவிலின் மேற்கு கோபுரச் சுவரில் இது தொடர்பாக ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், சுந்தரபாண்டியனின் போர் வெற்றிச் செய்தி குறிப்பிடப்படுகிறது. சோழர்கள், காடவர்கள் ஆகியோரை வென்ற சுந்தரபாண்டியன், அப்போர் வெற்றிகளால் கிடைத்த தங்கம், வெள்ளி ஆகியவற்றை அக்கோவிலுக்கே தானமாகக் கொடுத்தான். அதைக் குறிப்பிடும் கல்வெட்டுக் கவிதை இது :

இனவரிக்கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட்
சினமதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில்
வனத்திருவுடன் செஞ்சொற்றிருவை மணந்த தொக்கும்
கனகத்துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே

அந்தக் காலத்தில், கோவிலில் தானம் கொடுப்பதற்குத் துலாபார முறையை மேற்கொள்வார்கள். தராசின் ஒரு தட்டில் அரசனோ, அவனைச் சார்ந்த ஒன்றோ, ஏற்றப்பட்டு, மறு தட்டில் பொன்னும் வெள்ளியும் நவரத்தினங்களும் வைக்கப்படும். சுந்தரபாண்டியன் வழங்கிய பொருட்களால் கோவில் கருவறை விமானங்கள் தங்கமுலாம் பூசப்பட்டன. சுந்தரபாண்டியனின் இத்தகைய திருப்பணிக்ளால் அம்மன்னனுக்குக் ‘கோவில் பொன் வேய்ந்த பெருமாள்’ என்ற பட்டப் பெயரும் வழங்கப்பட்டது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)