பதிவு செய்த நாள்

20 பிப் 2018
16:46

                                                                                    1 
“என்ன விஷயம் ஸ்டேசி! ஏன் பதற்றமா இருக்கே?” என்று ஜென்னி கேட்டாள்.

“ஹூம்...எனக்கு உண்ஐயிலேயே இந்தப் பரீட்சைகளைப் பார்த்தா எரிச்சலா இருக்கு. மூட்டை மாதிரி புத்தகங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து ஒவ்வொரு பக்கமாத் திருப்பித்திருப்பி மனப்பாடம் பண்றது எனக்கு சுத்தமாப் பிடிக்கல...” என்று ஸ்டேசி கடுகடுத்த முகத்துடன் பதில் சொன்னாள்.

“உனக்கு என்ன கிறுக்கா? கமான். நாம் பரீட்சைக்குப் படிப்போம் வா. பரீட்சை, கிட்ட நெருங்கிருச்சு. சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினாள் ஜென்னி.

தேர்வுகள் முடிந்தன.

“ஹைய்யா! லீவு விட்டாச்சு. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஹைய்ய்யா” என்று கத்திக்கொண்டே ஸ்டேசி தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

                                                                                 2.

ஸ்டேசி காலணியைக் கழற்றியதும், அழைப்பு மணியை அழுத்தப்போனாள். ஆனால் கதவு திறந்தே இருந்தது. வரவேற்பறைக்குள் நுழைந்தாள். அங்கே சிவப்பு வெல்வெட் துணியால் முழுவதும் மூடப்பட்டு அழகாக அலங்கரிக்கப்பட்ட வட்டமான ஒரு மேஜையைப் பார்த்தாள். அந்த மேஜையின் மீது ஒரு பெரிய சாக்லேட் கேக், நாவில் எச்சில் ஊறவைக்கும் மிட்டாய்களுடன் இருந்தது. அதன் மீது அழகிய மெழுகுவத்திகள் வைக்கப்பட்டிருந்தன.

“ஹேய் ஸ்டேசி, நீ எப்ப வந்தே? அலங்காரங்களை எல்லாம் அபர்த்தியா?” என்று கேட்டான் ஜார்ஜ்.

“ஆமாம் சகோ... எதுக்காக இந்த ஏற்பாடெல்லாம்?”

க.சீ.சிவகுமார் நினைவுகூர்தல் நிகழ்வில் அவரது மகள் ஸ்வேதா சிவசெல்வி எழுதிய ‘பயணங்களின் திருவிழா’ நூல்வெளியீடு
க.சீ.சிவகுமார் நினைவுகூர்தல் நிகழ்வில் அவரது மகள் ஸ்வேதா சிவசெல்வி எழுதிய ‘பயணங்களின் திருவிழா’ நூல்வெளியீடு

“என்ன இப்படி கேக்கிற? ‘எல்லா’வோட பிறந்தநாள மறந்துட்டியா?”

“அடக்கடவுளே...எப்படி அதை மறந்து போனேன்? சரி, நீங்க எல்லோரும் அவளுக்குப் பரிசுகள் வாங்கிட்டீங்களா?”

“எல்லோரும் வாங்கியாச்சு. நீ மட்டும்தான் பாக்கி.”

“மாடியில இருக்கா. பார்ட்டிக்கு ரெடி ஆகிக்கிட்டிருக்கா.”

“ஆகட்டும். நான் பக்கத்து புக் ஸ்டோருக்குப் போய், அவளுக்கு ஒரு பரிசு வாங்கிட்டு வாரேன்” என்று சொல்லிக்கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டாள் ஸ்டேசி.

புத்தகக் கடையில் எல்லாவுக்குப் பொருத்தமான பரிசுப் பொருளைத் தேடி எடுத்தாள். அது, ‘மர்மக் கோட்டை’ என்ற புத்தகம்.

“எல்லாவுக்கு மர்மக்கதை என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏன்...அவளே ஒரு மர்மம்தானே...” என்று எண்ணம் இட்டபடி கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்தாள் ஸ்டேசி. பின்பு கடையிலிருந்து வெளியேறினாள்.

                                                                               3.

 “ஹைய்ய்யா...திகில் பூமி பூங்கா இன்னிக்கித் திறக்கப் போறாங்க. அது ரொம்ப அற்புதமா இருக்கும்.” என்று ஆனந்தத்தில் கீறிச்சிட்டாள் எல்லா. அவளுடைய சத்தத்தால் தூக்கம் தடைப்பட்டு எழுந்த ஸ்டேசி, தன் போர்வையைக் கீழே தள்ளிவிட்டுப் படுக்கையிலிருந்து குதித்தாள்.

“எல்ல்ல்லா, ஏன் இப்படிக் கத்தறே? அதுவும் காலையிலேயே.” என்று கலைந்த தலைமுடியுடனும் கோபப் பார்வையுடனும் கேட்டாள் ஸ்டேசி.

“இல்லக்கா...இன்னிக்கு திகில் பூமி பூங்காவை மறுபடியும் திறக்கப்போறாங்க. ஜார்ஜ் எங்கூட வர்றதாச் சொன்னான்.” கத்தினாள்.

“நிறுத்து. அந்தப் பூங்கா எப்போதும் போரடிக்கும்.”

“இல்லை ஸ்டேசி. இந்தத் தடவை அங்கே ஒரு பேய் வீடு இருக்கு. அதோட நாம புதையல் வேட்டையிலயும் பங்கு பெறலாம்” என்று திடீரென எங்கிருந்தோ முளைத்த ஜார்ஜ் குறுக்கிட்டுச் சொன்னான்.

“சரி சரி. நான் வர்றேன்.” என்றாள் ஸ்டேசி.

“நாம சீக்கிரம் தயாராகணும். சீக்கிரம், சீக்கிரம் அக்கா...” என்று எல்லா, தன் அறைக்கு ஓடியபடியே சொன்னாள்.

விரைவிலேயே தயாரானார்கள். உடனே அம்மாவிடம் விடைபெற்றுக் கரில் ஏறினார்கள். இறங்கும் வரையில் எல்லாவின் சலசலப்பு ஓயவே இல்லை.

‘திகில் பூமி’ என்று ஒரு பலகை. அதன் மீது ஓர் அரக்கன் சாய்ந்திருக்கிற மாதிரி அங்கே இருந்தது. ‘ஹைய்யா.’ என்று எல்லா மகிழ்ச்சியுடன் குதித்துக் கொண்டே கத்தினாள்.

ஸ்டேசி வெறுமனே தன் கண்களை மட்டும் உருட்டினாள். தண்ணீர் விளையாட்டிலேயே வெகுநேரம் கழிந்தது. இப்பொழுது தைரியமாக ரோலர் கோஸ்டரில் ஏறி உட்கார்ந்திருந்தார்கள். அது பேய் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகும். அந்த ரோலர்கோஸ்டரில் அவர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள்.

அவர்கள் பாதுகாப்பு பெல்ட்டுகளை மாட்டிக்கொண்டார்கள். ஸ்டேசியும் எல்லாவும் தங்கள் பர்ஸை ஜார்ஜிடம் கொடுத்தார்கள். அவன் அதைத் தன் முதுகுப்பையில் வைத்தான். எல்லா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். ஜார்ஜ் இடப்பக்கமும், ஸ்டேசி வலப்பக்கமும் உட்கார்ந்துகொண்டார்கள். மேலே கூரையிலிருந்து அல பேய்கள் தொங்கிக்கொண்டிருப்பத்டை அவர்கள் பார்த்தார்கள்.

பேய் வீட்டை நோக்கி ஆழமாகப் போகப்போக சில விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன. திடீரென ரோலர்கோஸ்டர் வேகமெடுக்க ஆரம்பித்தது. அந்தக் குழந்தைகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

“ஜார்ஜ் என்ன நடக்கு?’

“எனக்கு எப்படித் தெரியும் ஸ்டேசி?”

எல்லோரும் அலறத்தொடங்கினர்.

“உதவி! உதவி! ஓ ஓ ஓ ஓ ஐயோ...பயமாருக்கு.”

கொஞ்ச நேரத்தில் ரோலர்கோஸ்டர் வேகம் மெல்ல குறைந்து நின்றது. அவர்கள் கீழே இறங்கினார்கள். அப்போது அவர்கள் எதிரில் ஒரு கண்ணாடி இருந்தது. ஆனால் அதில் அவர்களுடைய உருவம் தெரியவில்லை. அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. ஆங்காங்கே மனித மண்டையோடுகள் குவிந்து கிடப்பதையும் பார்த்தார்கள்.

திடீரென எல்லாவின் தலைமுடியில் யாரோ தட்டியது போலிருந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே யாரும் தெரியவில்லை. அவர்கள் உண்மையிலேயே பீதி அடைந்தார்கள்.

அவர்கள் ஓர் இருண்ட, நிசப்தமான குகைக்குள் நுழைந்தார்கள். அந்தக் கொடிய இருட்டுக்குள் அவர்களுக்காகக் காத்திருந்தது என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.

(இருட்டுக்குள் என்ன காத்திருந்தது என்பதை அறிய, இந்த நாவலை வாங்கி, வாசித்து அறிந்துகொள்ளலாம்.)வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)