பதிவு செய்த நாள்

23 பிப் 2018
10:52

  பல்லவ ஓவியர் கிராமம் ஒருங்கிணைக்கும் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நாளை (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழக ஆளுநரின் செயலர் காயத்ரி. ஐ.ஏ.எஸ் துவங்கி வைக்க, துணை ஆணையாளர் ஈஸ்வரன் ஐபிஎஸ், குமரன் சில்க்ஸ் அதிபர் குமரன், ஆர்.எம்.கே.வி. அதிபர் சிவகுமார் , தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக ஓவியர்கள் வித்யாசங்கர் சலபதி, அல்போன்ஸ் அருள்தாஸ், ஜி.ராமன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இக் கண்காட்சியில் ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களான சாம் அடைக்கலசாமி, ராஜா சிகாமணி, அகஸ்டின் பால், நெல்சன் கென்னடி, தினகர், முருகன், ராபர்ட் வில்லியம்ஸ், ஜெயகன்னி, சாய் சங்கர், அந்தோணி ராஜூ, ஜோசப் ராஜ், பால் விக்கி ஆகியோரது ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இடம் : லக்‌ஷணா ஆர்ட் கேலரி, முதல் தெரு, அபிராமபுரம், சென்னை.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)